ஹதீஸ் எண் : 10
ஹழ்ரத் அப்துர்ரஹ்மான் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:-
நபி (ஸல்) அவர்கள் (ஒரு முறை) ரமலான் மாதத்தைப் பற்றிக் கூறும் பொழுது,
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:-
"(ரமழான்) மாதத்தில் நோன்பு வைப்பதை அல்லாஹுதஆலா உங்கள் மீது கடமையாக்கி உள்ளான், (மேலும்) தராவீஹ் தொழுவதை உங்களுக்கு நான் சுன்னத்தாக ஆக்கியுள்ளேன். எவர் அல்லாஹுதஆலாவின் வாக்குறுதிகளின் மீது நம்பிக்கை வைத்து, அதனுடைய கூலி, வெகுமதியைப் பெறும் ஆர்வத்தில் இம்மாதத்தில் நோன்பு வைத்து தராவீஹ் தொழுகிறாரோ, அவர் தாயுடைய வயிற்றிலிருந்து அன்று பிறந்த பாலகனைப் போன்று பாவங்களிலிருந்து பரிசுத்தமாகிவிடுகிறார்."
[நூல் : இப்னுமாஜா - 1,328]
COMMENTS