கனவு பற்றிய நபி மொழி
அபூ கத்தாதா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்:-
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:-
"நல்ல (உண்மையான) கனவுகள் அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். கெட்ட (மோசமான, பொய்யான) கனவுகள் ஷைத்தானிடமிருந்து வருவதாகும். எனவே ஒருவர் கெட்ட கனவு கண்டால் அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ்விடம்) அவர் பாதுகாப்புக் கோரிக்கொள்ளட்டும். (மேலும்) தமது இடப் பக்கத்தில் துப்பிக் கொள்ளட்டும். ஏனெனில் அப்போது அவருக்கு அது (அக்கனவு) எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திவிட முடியாது."
ஆதாரம்:- (புஹாரி - 6,986)
COMMENTS